sivakarthikeyan doctor movie which has collected 100 crore

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'டாக்டர்' படத்தில் நடித்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வினய் ராய், யோகி பாபு, ரெடின் கிங்ஸிலி, அருண் அலெக்ஸாண்டர் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வழங்க எஸ்.கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது.

Advertisment

கரோனா பரவலால் நீண்ட நாட்களாக வெளியீட்டில் தள்ளிப்போன 'டாக்டர்' திரைப்படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக கே.ஜே.ஆர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத்தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," இது வேற மாதிரி பிளாக்பஸ்டர். இப்படம் வெளியாகி 25 நாட்கள் உங்களை சிரித்து கைத்தட்டி உற்சாகப்பட வைத்துள்ளது. டாக்டர் திரைப்படத்தின் மொத்த திரையரங்க வசூல் 100 கோடியை கடந்துள்ளது என நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். இந்த வெற்றி உங்களுக்கும் எங்களுக்குமானது " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் 'டாக்டர்' திரைப்படம் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது.