"நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம்" - சிவகார்த்திகேயன் உருக்கம்

Sivakarthikeyan completing 10 years in cinema industry

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிமிக்கிரிகலைஞராக இருந்த சிவகார்த்திகேயன் கடந்த 2012 ஆம் ஆண்டுஇயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' படத்தின் மூலம்தமிழ் சினிமாவில்நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. அதன் பின் இயக்குநர் எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மனம் கொத்தி பறவை' பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் சிவகார்த்திகேயன் எனும் நடிகனை தமிழக மக்கள் கொண்டாட தொடங்கினர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பாக்ஸ் ஆபிஸ் நடிகராகவும் மாறியுள்ளார். சிவகார்த்திகேயன்சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து இன்றுடன்( 3.2.2022) ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில் இதனைநினைவு கூறும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அதில், "நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம்.இத்தருணத்தில் எனக்கு முதல்பட வாய்ப்பு அளித்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும் அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த அத்தனை இயக்குநர்களூக்கும், என் சக கலைஞர்களுக்கும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe