sivakarthikeyan completed his dubbing for amaran

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அமரன்’. இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மைய்யப்படுத்தி உருவாகி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம் சிங் உள்ளிட்ட பல இராணுவ வீரர்கள், காஷ்மீரிலுள்ள சோபியான் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தயாராகி வரும் இப்படம் இந்தாண்டு தீபாவளியான அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீஸர் கடந்த பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சமீபத்தில், சாய் பல்லவி இப்படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கினார். பின்பு படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த சுதந்திர தினத்தை(15.08.2024) முன்னிட்டு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் இப்படத்தின் டப்பிங் பணிகளை கடந்த 11ஆம் தேதி தொடங்கியிருந்தார். இது தொடர்பான வீடியோவையும் படக்குழ பகிர்ந்திருந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான படக்குழுவின் எக்ஸ் தள பதிவில், “டப்பிங் பணி துல்லியமாக நடந்து முடிந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment