Skip to main content

கார்த்தியுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Sivakarthikeyan competes with Karthi

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டான்'. இப்படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிவருகிறது. இதனை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்.கே 20' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'எஸ்.கே 20' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகிறது. 

 

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படமும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.        

 

 

சார்ந்த செய்திகள்