sk with ani

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

Advertisment

இதனிடையே 'இந்தியன் 2', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'டாக்டர்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ள சிவகார்த்திகேயன், “சார்.. எப்போனாலும் சரி, என்னைக்குன்னாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத் தயாரிப்பாளர் நான் தான். நன்றி சார்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக 'டாக்டர்' படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், "அந்தப் படத்தை இயக்க ஒரு வாய்ப்புக் கேட்டு வைச்சுக்கிறேன். மனசுல வைச்சுக்கோங்க" என்று தெரிவித்துள்ளார்.