
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குநர் அட்லியிடம் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள 'டான்' படத்தில், நாயகனாக நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் 19வது படமாக உருவாகும் இப்படத்தை, லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, பிப்ரவரி 2ஆம் வாரத்தில் இருந்து கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில், இன்று, பிப்ரவரி 17ஆம் தேதி, தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘டான்’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் சிவகார்த்திகேயன். இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)