Advertisment

பாலிவுட்டில் என்ட்ரியாகும் சிவகார்த்திகேயன் - ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்

sivakarthikeyan bollywood entry

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.

Advertisment

இப்படம் தெலுங்கில் 'மகாவீருடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அதனால் அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பிசியாக உள்ளனர் படக்குழு. அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரோடு தெலுங்கு பிரபலங்கள் அனுதீப், சேகர் கம்முலா, அட்வி சேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மேடையில் பேசிய அட்வி சேஷ், "சிவகார்த்திகேயன் ஒரு பெரிய நட்சத்திரம் மட்டுமல்ல, பெரிய மனமும் கொண்டவர். தெலுங்கிற்கு பிறகு தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். மன்னிக்கவும் இந்த ரகசியத்தை உடைத்துவிட்டேன்" என்றார்.

Advertisment

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகிஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர் வெற்றிகளால் குறுகிய காலத்திலே முன்னணிநடிகராக உயர்ந்துள்ளார். பின்பு தயாரிப்பாளராகவும் மாறினார். மாவீரன் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் நிலையில் விரைவில் பாலிவுட் பக்கம் அறிமுகமாகவுள்ளார் எனத்தெரிகிறது.

Maaveeran movie Bollywood actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe