Advertisment

அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

sivakarthikeyan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், இன்று தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து குவிந்து வரும் வாழ்த்துச் செய்திகளால் சமூக வலைதளங்கள் நிரம்பி வழிகின்றன.

Advertisment

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த காட்சியைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள்... பேரன்புடன் சிவகார்த்திகேயன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe