'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் வெற்றிகூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜாவே தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 17ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.