sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன், நெல்சன்இயக்கத்தில் 'டாக்டர்' என்றபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, கே.ஜே.ஆர்ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.'டாக்டர்'படத்தின்படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், 'டாக்டர்' படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, இன்று தொடங்கியுள்ளது. 'டாக்டர்' படத்தை தயாரிக்கும்கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை பட நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisment

அயலான் படத்தில்சிவகார்த்திகேயனின் ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களோடு, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார்.