Advertisment

சிவகார்த்திகேயன் vs சிவகார்த்திகேயன் ஃப்ரெண்ட் - இன்று நடக்கும் போட்டி! 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து ராஜேஷ் இயக்கியுள்ள 'மிஸ்டர் லோக்கல்' படம் இன்று (17 மே 2019) வெளியாகிறது. நயன்தாரா, யோகி பாபு, சதீஸ், ரோபோ சங்கர் என புகழ் பெற்ற நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ராஜேஷ், 'சிவா மனசுல சக்தி', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என காமெடி படங்களுக்குப் பெயர் பெற்றவர். சில தோல்விகளுக்குப் பிறகு அவர் இயக்கும் பெரிய படமாக இது கருதப்படுகிறது. இந்தப் படமும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இயக்குனர், பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் நடித்துள்ள 'நட்புனா என்னானு தெரியுமா' படமும் வெளியாகிறது.

Advertisment

sivakarthikeyan arunraja kamaraj

அருண் ராஜா காமராஜ், 'நெருப்புடா', 'வர்லாம் வர்லாம் வா' உட்பட பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் ஆவார். இவர் இயக்கிய 'கனா' திரைப்படம் சென்ற ஆண்டின் இறுதியில் வெளிவந்து பாராட்டுகளையும் நல்ல வெற்றியையும் பெற்றது. 'கனா' திரைப்படத்தை தனது நண்பருக்காக சிவகார்த்திகேயன் தயாரித்து அந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் திருச்சியில் கல்லூரி காலத்திலேயே நெருங்கிய நண்பர்கள். சென்னை வந்து 'கலக்கப் போவது யாரு' போன்ற நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக வாய்ப்புத் தேடி, பணியாற்றியுள்ளனர். இன்று இவர்கள் இருவருமே திரைத்துறையில் ஒரு நல்ல நிலையில் இருப்பது மகிழ்வுக்குரியது.

Advertisment

natpuna ennanu theiryuma

அருண் ராஜா காமராஜ், பாடலாசிரியர், இயக்குனர் என்பதைத் தாண்டி காமெடிப் பாத்திரங்களில் நடித்தும் உள்ளார். 'ராஜா ராணி', 'மரகத நாணயம்' ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. இவர் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில் கவின், ராஜு ஆகியோருடன் இணைந்து மூன்று நண்பர்களில் ஒருவராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் காமெடியில் கலக்கும் படமாக இருக்கிறது என்று சிறப்புக் காட்சியை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

சிவகார்த்திகேயன், அருண் ராஜா என நண்பர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.

arunrajakamaraj actor sivakarthikeyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe