இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பி.எஸ். மிதரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படபிடிப்பு இன்று தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஹீரோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல விஜய் தேவரகொண்டா நடிப்பில், காக்கா முட்டை திரைப்படத்தின் வசனகர்த்தா ஆனந்த அண்ணாமலை இயக்கத்தில் உருவாகும் பன்மொழிப் படத்துக்கும் ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு படங்களுக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் ஹீரோ என்ற தலைப்பை வைக்க ஒப்புதல் சீட்டு கொடுத்துள்ளதால சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு படங்களில் ஏதேனும் ஒரு தரப்பு கண்டிப்பாகப் படத் தலைப்பை மாற்றியாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா படத்துக்காக ஏற்கெனவே ‘ஹீரோ’ என்ற தலைப்பைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து, அதைக் கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் 14-ம் தேதி புதுப்பித்துள்ளனர். வருகிற ஜூன் மாதம் 14-ம் தேதிவரை அதற்கான காலக்கெடு உள்ளது. இந்த ரசீதை விஜய் தேவரகொண்டா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம், ‘ஹீரோ’ என்ற தலைப்பை வைத்துக்கொள்ள சிவகார்த்திகேயன் படத்துக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இதற்கான கடிதத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸுக்கு அளித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.
தெலுங்கில் இதுவரை இரண்டு படங்கள் ஹீரோ என்ற தலைப்பில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த தலைப்பில் இதுவரை எந்த படமும் வரவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)