Advertisment

பிறந்தநாளை முன்னிட்டு புது போஸ்டர் வெளியிட்ட படக்குழு

sivakarthikeyan amaran new poster

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன்காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையோடு ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் சிவகார்த்திகேயன். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமரன் படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துஒரு போஸ்டரைவெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டீசர், டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்ட நிலையில் தற்போது புது போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது.

actor sivakarthikeyan Raajkamal Films
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe