Advertisment

முதல் நாள் வசூலில் சாதனை படைத்த அமரன்

sivakarthikeyan amaran first day box office collection

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்

Advertisment

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தீபாவளிக்கு(31.10.2024) வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பாராட்டி இருந்தனர். மேலும் இயக்குநர்கள் அட்லீ, அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக பாராட்டு தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் அமரன் படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்து புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களில் இப்படம் முதல்நாளில் அதிகளவில் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Rajkumar Periasamy actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe