சிவகார்த்திகேயன் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

sivakarthikeyan

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் 182 வகையான இனத்தைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இங்குள்ள உயிரினங்களின் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கோடு விலங்கு தத்தெடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான உயிரினங்களை அதற்கான கட்டணத்தை செலுத்தி குறிப்பிட்ட சில காலங்களுக்குத் தத்தெடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் கிடைக்கும் வருவாய் உயிரினங்களின் உணவு, இருப்பிட பராமரிப்பு, மருத்துவச் செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படும்.

அந்த வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், ப்ரகிர்த்தி என்ற பெண் யானையையும் 6 மாத காலத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். இத்தகவலை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. முன்னதாக, நடிகர் சிவகார்த்திகேயன், அனு என்ற வெள்ளைப்புலியை 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தத்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe