
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் 'அயலான்' படத்தை 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே ஆரம்பித்து பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இதன் படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாயகி ரகுல் ப்ரீத் சிங் 'அயலான்' படத்தில்தன்னுடைய பகுதி படப்பிடிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "அயலான் திரைப்படத்தின் கிட்டத்தட்ட கடைசிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். எனக்கு கடைசி 3 நாட்கள் மட்டுமே உள்ளது. என்ன ஒரு உணர்ச்சிமிக்க இயக்குனர் ரவிக்குமார். இனிமையாகப்பழகக்கூடியவர் சிவகார்த்திகேயன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் ட்வீட் செய்த சிவகார்த்திகேயன், "உங்களுடன் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி ரகுல் பிரீத். என்னை எப்போதும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி ராஜா பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)