Advertisment

“என் அதிர்ஷ்டம்” - ரஜினி குறித்து நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

79

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாக திகழும் ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுகாலத் திரைபயணத்தை நிறைவு செய்யவுள்ளார். இவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வரும் 15ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடக்கிறது. இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பாலும், எனர்ஜியுடன் தோன்றும் வசீகரத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவர், தற்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை(14.08.2025) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

Advertisment

இந்த நிலையில் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் துணை முதல்வர் உதயநிதி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

Advertisment

இந்த நிலையில், சிவகார்த்திகேயன், “தலைவா... நான் உங்களை பார்த்து தான் வளர்ந்தேன். உங்களை போல் மிமிக்ரி செய்தேன், உங்கள் அடிச்சுவடுகளில் நடந்தேன்... இப்போது நீங்கள் இருக்கும் அதே துறையில் இருக்கிறேன். இது எனக்கு அதிர்ஷ்டம். என்னை இன்ஸ்பைர் செய்ததற்கு நன்றி. மேலும் உங்களது 50 ஆண்டு இமாலய திரைபயணத்திற்கு வாழ்த்துக்கள். கூலி படம் உங்கள் மகுடத்தில் இன்னொரு வைரமாக இருக்கும். உங்களை இப்போதும் எப்போதும் அதை கடந்தும் நேசிப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் மாபெரும் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Actor Rajinikanth actor sivakarthikeyan Coolie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe