Skip to main content

மிஸ்டர்.லோக்கல் வெற்றியா? தோல்வியா? சிவகார்த்திகேயன் பதில்...

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்து புதுமுகத்தினர்களை சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார். சிவா நடத்தும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம்  ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை செய்தது. கடந்த வருடத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இது இருந்தது.
 

sk

 

 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவா தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டாவது படத்தை தயாரிக்க இருப்பதாகவும். பிரபல யூ ட்யூப் சேனல் பிளாக் ஷீப் குழுதான் அந்த படத்தில் பணிபுரிய உள்ளதாகவும், ரியோ ராஜ் ஹீரோ நடிக்கிறார் என்று அறிவிப்பு விட்டிருந்தார். தற்போது அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. 
 

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூன்றாவதாக தயாரிக்க இருக்கும் படத்தை பற்றியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அருவி என்ற படத்தை இயக்கிய அருண் இயக்கத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சிவா. 
 

மேலும் மிஸ்டர் லோக்கல் தோல்வியை குறித்து சிவா பேசியது: “மிஸ்டர் லோக்கல் தோல்விப் படம்தான். மிஸ்டர் லோக்கல் படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்ததா என்பதைப் பற்றியெல்லாம் பேச விரும்பவில்லை. என்னுடைய பயணம் நட்பு, துரோகம், சாதனை என அனைத்தும் கலந்ததுதான். இந்த நிலையில் இருக்கும் போது என்னுடைய படம் தொழில்ரீதியாக எல்லோருக்கும் லாபமானதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். தோல்வியில் கூட என்னுடன் இருக்கும் எனது ரசிகர்கள் தான் எனக்கு பலம். இனிமேல் எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாகவே இருக்கும். அதை நான் இப்போது உறுதியாக சொல்கிறேன்”.


 

சார்ந்த செய்திகள்