Advertisment

“இதற்காக தான் இவ்ளோ வருஷம் போராடினோம்” - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

sivakarthikeyan about ayalaan response

Advertisment

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வாங்கியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று (12.01.2024) வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் வலி நிறைந்த கதை இருக்கும். ஒவ்வொரு வேதனையான கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு. வலியை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற தயாராகுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ad

நிறைய சிக்கல்களை தாண்டி வெளியாகியுள்ள இப்படத்தை,சிவகார்த்தியேன் ரசிகர்களுடன் பார்க்க, இன்று காலை சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார். படம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சைன்ஸ் ஃபிக்சன் ஃபேண்டஸி ஜானரில் இப்படம் வெளியாகியிருக்கிறது. நம்ம ஊர்ல இது மாதிரி ஜானர் ரொம்ப ரொம்ப குறைவு. அதை முயற்சி பண்ணியிருக்கோம் என்பதே எனக்கு சந்தோஷம். தியேட்டருக்கு போங்க. என்ஜாய் பன்னுங்க. நம்பி வாங்க. சந்தோஷமா போங்க. ரிபீட்ல வாங்க. அயலான், எனக்கு ரஜினி முருகன் படத்துக்கு பிறகு பொங்கலுக்கு இரண்டாவது ரிலீஸ். இதுவும் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன்” என்றார்.

Advertisment

பின்பு படம் முடிந்து வெளியே வந்த அவர், “இதற்காக தான் நாங்க இவ்ளோ வருஷம் போராடினோம். இன்னைக்கு அது கிடைச்சிருக்கு. அதைத்தாண்டி இன்று நேற்று நாளை படத்திற்கு பிறகு ரவிகுமார் பெயரை ஸ்கிரீனில் பார்த்தது தான் எனக்கு பெரிய சந்தோஷம். நானும் ஏலியன் வருகிற காட்சியெல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அதுக்குதான் ஆசைப்பட்டோம் அது நடந்திருக்கு” என நெகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.

director ravikumar r ayalaan actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe