பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் சிவகார்த்திகேயன் பட அப்டேட்

sivakarthikeyan 21st movie update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அதன் காரணத்தால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஹேர்ஸ்டைல் மாற்றியிருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப்பின் வெளியாகும் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இடம் பெற்றுள்ளது. மேலும் துப்பாக்கி சூடும் பயிற்சியும் மேற்கொள்கிறார். அதோடு ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிப்பதை இந்த ப்ரோமோ வீடியோவில் படக்குழு உறுதிசெய்துள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

actor sivakarthikeyan Raajkamal Films SK 21
இதையும் படியுங்கள்
Subscribe