மிஸ்டர் லோக்கல் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்திலும், பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் நடித்துவருகிறார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அந்த படத்திற்கு பெயர் ஹீரோ என்றும் சமீபத்தில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதில் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர். கிராமத்து கதையை கொண்ட இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மிக குறைந்த நாட்களிலேயே பாண்ட்ராஜ் இயக்கும் படத்தின் பிராதான காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வருகின்ற 12ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இவ்விரண்டு படங்களை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன், நெல்சன், ரவிக்குமார் ஆகியோரது இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.