ADVERTISEMENT

சிவகார்த்திகேயன்தான் மிமிக்கிரியில் இந்தப் புதுமை செய்தார்.

04:11 PM Sep 11, 2018 | tarivazhagan

மிமிக்கிரியில் சிவகார்த்திகேயன் கொண்டு வந்த மாற்றத்தையும் அதிலிருந்து தான் கற்றுக்கொண்டதையும் கனா திரைப்படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நக்கீரனுடன் பகிர்ந்துகொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

எனக்கும், சிவாவுக்கும் எப்பவும் ஒரே விஷயம்தான். இதுவரைக்கும் யாரும் பண்ணாத ஒரு விஷயத்தை பண்ணனும். அப்படி வந்ததுதான் தசாவதாரம் பாடல். சிவா வரதுக்கு முன்னாடி வரை ’மிமிக்கிரி’ அப்படினா ஒரு கான்சப்ட் எடுத்து அதுக்கு ஒவ்வொரு நடிகர்கள் பேசினா எப்படி இருக்கும்னு பண்ணுவாங்க அதுதான் மிமிக்கிரினு இருந்துச்சு. ஆனா, சிவா வந்ததுக்கு அப்புறம் ஒரு கான்சப்ட் எடுத்தா அதுல எல்லாருக்கும் ஒரு கேரக்ட்டர் இருக்கும், அதை நாங்கள் முதலில் சொல்லாம மிமிக்கிரி பண்ண ஆரம்பிப்போம் மக்கள் கொஞ்ச நேரத்தில் அதை சரியா கண்டுபிடிச்சிடுவாங்க. எனக்கு தெரிஞ்சு அவர் வந்துதான் மிமிக்கிரிக்கு புதுசா ஒரு வடிவம் கொடுத்தார். அது மிமிக்கிரிக்கு மட்டுமல்ல, நான் மட்டும் தனியா கான்செப்ட் பண்ணும்போதும் ரொம்ப உதவியா இருந்துச்சு.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT