sivaji ganesan son ramkumar beating person in sivaji ganesan birth anniversary celebration

நடிகர் சிவாஜி கணேசனின் 97 ஆவது பிறந்த தினமான இன்று(01.10.2024) சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிவாஜியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் என பலரும் அவரது படத்திற்கு மரியாதை செய்தனர். அப்போது சிவாஜியின் குடும்பத்தினர் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு மற்றும் அவரது மனைவி உட்பட அனைவரும் இருந்தனர்.

இதையடுத்து பிரபு நடிப்பில் உருவாகி வரும் ராஜபுத்திரன் படத்தின் போஸ்டரை வெளியிடப்பட்டது. சிவாஜி சிலைக்கு முன்பு போஸ்டரை வெளியிட்டு அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசி வந்தார். அப்போது மேடையில் அதிகமானோர் இருந்தனர். அதில் ஒரு நபர் முன்னே வர முற்பட்டார். இதனால் கோவமான சிவாஜியின் மூத்த மகன் ராம் குமார், அந்த நபரை கையால் இரண்டு முறை ஓங்கி குத்தி பின்னே தள்ளினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.