Advertisment

'சொத்து பிரச்சனை' - பிரபு மீது சிவாஜி மகள்கள் புகார்

Advertisment

sivaji ganesan daughters have filed case against prabhu and ramkumar

80 களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவருக்குராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்விஎன்ற இரு மகள்களும் உள்ளனர். ஏராளமான படங்களில் நடித்த சிவாஜி கணேசன் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். அவரின் மறைவுக்கு பிறகு அவர்களதுவாரிசுகளான ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்விஆகியோர் அனுபவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தந்தையின் சொத்தில் தங்களுக்குபங்கு தராமல் பிரபுவும், ராம் குமாரும்ஏமாற்றிவிட்டதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்விஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், "எங்களுடையதந்தை சம்பாதித்த சொத்து தொடர்பாக எந்த ஒருஉயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார், பிரபு ஆகியோர் ஜோடிக்கப்பட்ட பொய்யான உயிலை காட்டி ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் சேர்த்து வைத்த 1000 சவரன் தங்க நகைகள், வைரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றையும் எங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டனர்.மேலும் எங்களுக்குதெரியாமல் பல சொத்துக்களை விற்று விட்டனர். இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப் பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

actor sivaji ganesan chennai high court prabhu
இதையும் படியுங்கள்
Subscribe