
தமிழ் சினிமாவின் முதல் 'ஸ்பூப்' படமான 'தமிழ்படம்' மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 'தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் கிண்டலடித்துள்ளது போல் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதில் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை போன்று படக்குழுவினர் உருவாக்கி கிண்டலடித்துள்ளனர்.