Advertisment

’ஒரு ஸ்டேஜ்ல ஒரு ஆயிரம் கைதட்டல் கிடைக்காதான்னு ஏங்கி....’-தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

நெருப்புடா நெருங்குடா பாடல் மூலமாக பரவலாக பேசப்பட்டுவந்த பாடலாசிரியரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் திரைப்படம் ’கனா’, அப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன்தான் தயாரிக்கிறார்.

Advertisment

மேலும், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்தியராஜ் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலேயே தனது தயாரிப்பில் வெளிவரப்போகும் அடுத்த படக் குழுவினரை அறிமுகம் செய்து வைத்தார் சிவகார்த்திகேயன். அப்போது பேசியதாவது...

Advertisment

”என்னுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படமான கனாபடக்குழுவ பார்த்துவிட்டோம். அதேபோல, என்னுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2-வது படக்குழுவையும் இதே மேடையில் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். உங்க எல்லாரையும் சிரிக்க வைத்த யூ-ட்யூபில் கலக்கிகொண்டிருக்கும் ப்ளாக் ஷீப் குழுதான் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்கள் என்று தெரிவித்து, ஒட்டுமொத்த ப்ளாக் ஷீப் குழுவையும் மேடையில் அறிமுகம் செய்துவைத்தார். ப்ளாக் ஷீப் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நடிகர் விக்னேஷ் காந்த் பிசியாக இருப்பதால் இந்நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. இந்த குழுவின் யோசனை எங்கள் நிறுவனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் நிறைய காமெடி இருந்தது, அதனுள் சின்னதா ஒரு சோஷியல் விஷயம் இருந்தது என்று பெருமிதம் கொண்டார். இவர்கள் யூ-ட்யூபில் நம்மை என்டர்டைன்ட் செய்தது போல திரைப்படத்திலும் செய்வார்கள், அப்படியான முயற்சியாகத்தான் இது இருக்கும்” என்றார்.

siva

மேலும், ”இப்படத்தின் ஹீரோ சரவணன் மீனாட்சித் தொடரில் இறுதியாக சரவணன் என்னும் கதாபத்திரத்தில் நடித்த ரியோதான் என்று அறிமுகம் செய்துவைத்து. பின், இந்த நிகழ்ச்சியைக்கூட அழகா நடத்துவது இந்த ப்ளாக் ஷீப் குழுதான் என்று கூறினார். இறுதியாக சிவா, எங்கயோ ஒரு ஸ்டேஜ்ல ஒரு ஆயிரம் கைதட்டல் கிடைக்காதான்னு ஏங்கி, 'மிமிக்கிரி' பண்ணிட்டு இருந்த ஒருவனை, தூக்கிவந்து இப்படி ஒரு மேடையில் நிக்கவச்சதுக்கு. மொத்த தமிழக மக்களுக்கும் பெரிய நன்றி. இந்த வாய்ப்பும், வாழ்க்கையும் எனக்கும் என் குடும்பத்துக்கும் மட்டும் பயன்படாம, இன்னும் நிறைய பேருக்கு பயன்படற மாதிரி வாழுவேன். நான் சாகும்போது நாலுபேராவது 'ஒரு நல்ல விஷயம் பண்ணியிருக்கேன்னு சொல்ற மாதிரிதான் வாழ்ந்துவிட்டு போவேன், அப்படியான உறுதியை இந்த மேடையில் சொல்லிக்கொள்கிறேன்.... நன்றி அண்ட் 'லவ் யூ ஆள்' என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

taamilcinemaupdates aishwaryarajesh sivakarthikeyan arunrajakamaraja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe