
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
பட அதிபர்கள் ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிவைத்திருந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் - சிவா கூட்டணி 4வது முறையாக இணைந்துள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என்று முன்பு சொல்லப்பட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாக ஆரம்பித்ததனால் 'விஸ்வாசம்' படம் வரும் போது வரட்டும். தற்சமயம் படப்பிடிப்பாவது தொடங்கினால் சரிதான் என்ற மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். இதனால் படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள அரங்கில் வேகமாக நடந்து வரும் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து 2ஆம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார் என்று தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால் வருகிற தீபாவளியை 'தல' தீபாவளியாக கொண்டாடலாம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)