Skip to main content

சிம்பு படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த சிவகார்த்திகேயன்...

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

நடிகர் சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்து பின்னர் படிபடியாக சினிமாத் துறைக்குள் நுழைந்து தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தொகுப்பாளராக பணிபுரிவதற்கு முன்பு கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததாக சிவா சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
 

sk

 

கடந்த வருடம் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன், கடந்த 2011ஆம் ஆண்டில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்றொரு படத்தை இயக்கினார். அந்த படம் பாதியிலேயே ட்ராபானது. அந்த படத்தில்தான் நெல்சனுக்கு உதவி இயக்குனராக சிவகார்த்திகேயன் பணி புரிந்துள்ளார். சிவாவின் நண்பரும் பிரபல பாடகர், பாடலாசிரியர், இப்போது இயக்குனர் என்று அனைத்து துறைகளிலும் ஹிட் அடிக்கும் அருண் ராஜாகாமராஜும் இவருடன் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் தானாம். 
 

இதனால்தான் சிவா தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் வரும் கிரிக்கெட் கற்றுத்தரும் கதாபாத்திரத்திற்கு நெல்சன் என்று பெயர் வைக்க காரணம் அதுதான் என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.