விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் சிவா எந்த ஹீரோவுடன் இணைந்து பணி புரிய இருக்கிறார் என்று பலரும் எதிர்பார்த்துகொண்டிருந்தனர். இதற்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் விடை அளித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/suriya_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சூர்யாவின் 39வது படத்தை சிவாதான் இயக்குகிறார் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சூர்யா என்ஜிகே, காப்பான் என்ற இரு படங்களின் வெளியிட்டீற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதனை அடுத்து ‘சூரரைப்போற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இந்த படம் முடிவடைந்ததும் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
சிறுத்தை படம் இயக்கும்போதே, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இரண்டு படங்களை இயக்குவதாகதான் சிவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார்.
சூர்யா படத்தை முடித்துவிட்டு, மீண்டும் அஜித் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)