siva directing ajith ak63 film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 200கோடி வசூலைக் குவித்து இன்னும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தினைஎச்.வினோத் மூன்றாவது முறையாக இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது, இப்படத்தினைபோனி கபூர் தயாரிக்கிறார். அதைத்தொடர்ந்து 'அஜித் 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

அஜித் ரசிகர்களுக்கு தொடர்ந்து அப்டேட் வந்து கொண்டிருக்கும் நிலையில், 'அஜித் 63' படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவாவுடன் மீண்டும் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கப்போகிறார் என்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.