sivakarthikeyan

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் டீஸர் அவருடைய பிறந்த நாள் அன்று வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன், பெயரிடாத சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசை அமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. பூஜையின்போது வைக்கப்பட்ட கிளாப் போர்டில் இந்த படத்தின் பெயர் ஹீரோ என்று உள்ளது .இதுவரை இந்த படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தை விஸ்வாசம் திரைப்படத்தை டிஸ்ட்ரீபூட் செய்த கேஜெஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றனர்.

Advertisment