Sita Ramam Trailer out now

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தமிழிலும் கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திலும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் 'ஹே சினமிகா' ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தற்போது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சீதா ராமம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisment

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்ற நிலையில் தற்போது ட்ரைலரைபடக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமானகாதல் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின்ட்ரைலர்பலரின் கவனத்தை பெற்று வருகிறது. அத்துடன் படத்தின் டாக் லைனில் ‘போரூற்றிஎழுதிய காதல் கதை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.