Advertisment

மீண்டும் முன்னணி நடிகருடன் கெளதம் மேனன்; வெளியான ஃபர்ஸ்ட் போஸ்டர்

Sita Ramam gautham menan first look poster out now

Advertisment

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தமிழிலும் கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் 'ஹே சினமிகா' ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தற்போது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சீதா ராமம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ அதிகாரி கெட்டப்பில் தோன்றியுள்ள கெளதம் மேனனின் கதாபாத்திரத்தின் பெயர் மேஜர் செல்வம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மானும் கெளதம் மேனனும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

rashmika mandana dulquer salman gautham menon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe