Advertisment

"அதை சாத்தியப்படுத்த நாம் உறுதி ஏற்போம்" - சிறுத்தை சிவா ட்வீட்

Advertisment

siruthai siva tweet about noise pollution

தமிழ் சினிமாவில் 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட சில வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானவர் சிவா. அந்த வகையில் 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஒலி மாசை ஒழிப்போம்' எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புற மற்றும் ஸ்டுடியோ தளங்களில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி ஏற்போம். அதை சாத்தியப்படுத்த அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பிகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்துப் படக்குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் காப்போம். ஒலி மாசை ஒழிப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து இயக்கி வரும் படப்பிடிப்பில் ஒலி மாசற்ற பகுதியாக மாற்ற முன்னேற்பாகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

siruthai siva Suriya 42
இதையும் படியுங்கள்
Subscribe