Siruthai Siva

Advertisment

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சிறுத்தை சிவா பேசுகையில், "சினிமா பற்றிய அனைத்து துறைகளையும் அல்லு அர்ஜூன் தெரிந்து வைத்திருக்கிறார். அவரை சந்தித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அவரோடு பேச பேச சினிமா பற்றி அவர் சொன்னது பிரமிப்பாக இருந்தது. பாடல்கள் எல்லாம் மிக அற்புதமாக வந்திருக்கின்றன. தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் அசத்தியிருக்கிறார். பாடல் கேட்க அவ்வளவு நன்றாக இருந்தது. ட்ரெய்லர் எல்லாம் சூப்பராக இருந்தது. படக் காட்சிகள் பார்க்கும்போதே வெற்றி உறுதியாக தெரிகிறது. அல்லு அர்ஜூனுக்கு தமிழில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் வாழ்த்துகள்.