சமந்தா, ஆதி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'யூ-டர்ன்' படத்தை பவன் இயக்கியுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் இந்தப் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் 'சிறுத்தை' சிவா கலந்துகொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/director siva1 - Copy.jpg)
பொதுவாக திரைப்பட விழாக்களில் அதிகம் தென்படாத சிவா, இந்த நிகழ்வில் கலந்துகொண்டதற்கான காரணத்தை அவரே தெரிவித்தார். "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி சார் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி சினிமாவில் ஜெயிக்கணும்னு நான் ஹைதராபாத் போனதுல இருந்தே பல விதங்களில் எனக்கு பெரிய சப்போர்ட்டா இருந்தவர். அவர் இப்போ ஒரு தயாரிப்பாளரா உயர்ந்திருக்கார். அதுவும் ஒரு நல்ல ப்ராஜக்ட்ல லான்ச் ஆகியிருக்கார். இந்த நேரத்தில் அவர் கூட இருக்கணும்னு தோணுச்சு. அதான் இந்த விழாவுக்கு வந்தேன். பவன் ஒரு ரொம்ப நல்ல ஃபில்ம் மேக்கர். அவர் படங்கள் நான் பாத்துருக்கேன், எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படம் வணிக ரீதியாகவும் பெருசா வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று மேடையில் பேசும்போது கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva - Copy (2).jpg)
'விவேகம்' படம் குறித்த கலவையான மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வெளிவந்தது. அதன் பிறகு சிவா அதிகமாக விழாக்களில் கலந்துகொள்ளவில்லை. அவர் கலந்துகொண்ட இந்த விழாவில் தன் நண்பர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 'விஸ்வாசம்' திரைப்படம் நன்றாக வந்து கொண்டிருப்பதால் உற்சாகமாக காணப்பட்ட சிவா, 'கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் இருக்கு. இன்னும் முப்பது நாளில் படப்பிடிப்பு நிறைவடைந்ததென்ற செய்தி வரும்' என்று உற்சாகமாகக் கூறியுள்ளார். சமீபத்தில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது. அதில் இரட்டை வேடத்திலிருந்த அஜித் முரட்டு மீசையுடன் இருந்தார். படம், வீரம், வேதாளம் போல மாஸ் என்டர்டைனராக இருக்கும் என்கிறது சிவா அண்ட் டீம்.
Follow Us