siruthai siva about kanguva fdfs

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று(14.11.2024) பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர்.

Advertisment

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த சிறப்பு காட்சியை காண சூர்யா ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்குகளுக்கு வந்து பட்டாசு வெடித்தும் பேனருக்கு மாலை அணிவித்தும் மேளதாளத்துடன் படத்தை வரவேற்று கொண்டாடினர். மற்ற மாநிலங்களில் நள்ளிரவு 1 மணி முதலே சிறப்பு காட்சி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம் வெற்றி பெற கார்த்தி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு ஹ்டிரை பிரபலங்கள் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் இயக்குநர் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் சிவா பேசுகையில், “கங்குவா படம் இன்று வெளியானதில் ரொம்ப மகிழ்ச்சி. அமெரிக்காவில் படம் பார்த்த நண்பர்கள் இப்ப தான் போன் பண்ணாங்க. மிகப்பெரிய வெற்றி படம்னு சொல்றாங்க. ரொம்ப திருப்தியா இருக்கு” என்றார்.