siruthai siva about kanguva climax

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவை நக்கீரன் ஸ்டுடீயோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் கங்குவா படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் படம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதிலையும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார். கங்குவாவின் இறுதி ரிசல்ட் தொடர்பான கேள்விக்கு சிவா பதிலளிக்கையில், “படத்தின் ரிசல்ட் இரண்டாவதுதான். கடந்த நிமிடம் சென்றுவிடும், வரும் நிமிடத்தைப்பற்றி நமக்குத் தெரியாது. அதனால் இருக்கும் நிமிடத்தில் செய்யும் வேலையை உண்மையாக நேசித்து அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அதை மனதில் வைத்து தான் வேலை செய்தேன். இதைப் படத்தில் மட்டுமில்லை, என்னுடைய வாழ்க்கையிலும் பின்பற்றி வருகிறேன். இருக்கும் இந்த நொடியில் சந்தோஷாக இருக்க வேண்டும். அதுதான் ரிசல்ட்டை நோக்கிய பயணம்.

Advertisment

இப்படத்தில் பணியாற்றியபோது ஒவ்வொரு நாளும் எனக்கு வியப்பூட்டும் வகையில் அமைந்தது. அந்தளவிற்கு சூர்யாவின் நடிப்பை படமாக்கும்போது கிரிக்கெட் மைதானம்போல் படப்பிடிப்பு தளத்தை உணர்ந்தோம். கிரிக்கெட் விளையாடும்போது சக வீரர் சிக்ஸ் அடித்தால் அவரை பாராட்டுகிறோம். அதுபோல் படப்பிடிப்பிலும் சூர்யா நல்ல நடிப்பை வெளிப்படுத்தினால், அதை மொத்த டீமும் பாராட்டி சந்தோஷப்படுவோம். அதனால் ரிசல்ட்டைப் பற்றிப் பெரிதாக யோசிக்க மாட்டோம்” என்றார்.

இப்படத்தை எடுக்க எந்தளவிற்கு கஷ்டப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு சிவா பதிலளிக்கையில், “சினிமாவுக்காக கஷ்டப்படுவெதல்லாம் ஒரு கஷ்டமே கிடையாது. கட்டடத் தொழில், மூட்டை தூக்கும் தொழில் போன்றவற்றை சினிமாவுடன் ஒப்பிட்டால் சினிமா என்பது ஒன்றுமே கிடையாது. ஆனால், ஒவ்வொரு தொழிலிலும் ஒரு முனைப்பு இருக்கிறது. அதுபோல் இந்த படத்திற்கும் சூர்யாவிடமிருந்து ஒரு முனைப்பாக சிக்ஸ் பேக் தேவைப்பட்டது. கங்குவா கதாப்பாத்திற்காக முறையான டயட்டை சூர்யா பின்பற்றினார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.

Advertisment

க்ளைமாக்ஸில் சிக்ஸ் பேக்குடன் கங்குவா கதாபாத்திரம் வருவதுபோல் ஒரு காட்சி இருக்கிறது. அதைப் படமாக்கிய பின் அந்த காட்சியை மானிட்டரில் பார்த்த சூர்யா, தனது முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று மிகவும் சந்தோஷப்பட்டார். சிக்ஸ் பேக்குடன் அவர் நடித்த அந்த காட்சி மிக அற்புதமாக இருக்கும். அந்த தருணத்தை என்னால் இப்போதுவரை மறக்க முடியவில்லை” என்று கூறினார்.