style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
'ஹிப்ஹாப்' ஆதியின் 'நட்பே துணை' படத்தில் 'கேரளா சாங்' பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் தற்போது, அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'சிங்கிள் பசங்க' என்று தொடங்கும் பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் வரிகலில் வெளியாகி ஹிட்டடித்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் இப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.