singer Suchisinger Suchitra police complaints against bayilvan ranganathantra police complaints against bayilvan ranganathan

Advertisment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றி யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு பல நேரங்களில் எல்லை மீறிப் போவதாகக் கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன், பாடகி சுசித்ரா குறித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில், நடிகர் பயில்வான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் பாடகி சுசித்ரா. அதில், “நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பி வருகிறார். அந்த வகையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். எனவே ஆதாரமில்லாமல் பொய்களைப் பரப்பும் பயில்வானை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.