Advertisment

பிரபல தயாரிப்பாளரை எச்சரித்த பாடகர்!

sonu nigam

இந்திய சினிமாவின் பிரபல இசை லேபில் நிறுவனம் பூஷன் குமாரின் 'டி- சீரிஸ்'. இந்நிறுவனம்தான் யூ-ட்யூபின் முதல் 100 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸை பெற்றமுதல் யூ-ட்யூப் சேனல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் பாலிவுட்டில் மிகவும் வலிமையான ஒரு தயாரிப்பு நிறுவனமாக இருக்கின்றது.

Advertisment

தற்போது இந்நிறுவனத்தின் உரிமையாளரை பிரபல பாடகர் சோனு நிகாம் எச்சரித்து வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பூஷன் குமார், இப்போது உங்கள் பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும். இப்போது உங்களை மரியாதையுடன் அழைக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நீங்கள் தவறான நபரோடு மோதிவிட்டீர்கள். என் வீட்டுக்கு வந்து எனக்காக ஒரு ஆல்பம் பதிவு செய்யுங்கள் தம்பி. எனக்கு ஸ்மிதா தாக்கரே, பால் தாக்கரேவை அறிமுகம் செய்து வையுங்கள் தம்பி என்று என் வீட்டுக்குக் கெஞ்சியபடி வருவீர்களே, நினைவில் உள்ளதா. அபு சலீமிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள், அபு சலீம் என்னை அச்சுறுத்துகிறான் என்று சொன்னீர்களே நினைவில் உள்ளதா? என்னுடன் மோதாதீர்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்.

Advertisment

மரினா கவர் நினைவில் உள்ளதா? அவர்கள் ஏன் பேசினார்கள், பின் ஏன் பின்வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாஃபியா எப்படி வேலை செய்யும் என்பது ஊடகங்களுக்குத் தெரியும். என்னிடம் இன்னும் அந்த வீடியோ உள்ளது. என்னிடம் மோதினால் அந்த வீடியோவை யூ-ட்யூபில் பதிவேற்றிவிடுவேன். எனவே என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe