கடந்த சில தினங்களாக சமூல வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, ஒரு இளைஞன் ‘ரோஜா ரோஜா’ பாடல் பாடும் வீடியோ. அந்த வீடியோவில் இளைஞன் அப்பாடலை மிகவும் அழகாக அதுவும் எந்த ஆடம்பரமும் ஆர்பாட்டமும் இல்லாமல் அசால்ட்டாக பாடுவதாக பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டு வந்தனர். இதனால் யார் அந்த இளைஞன் என பலரும் தேட ஆரம்பிக்க, நடுவே அவருக்கு சினிமாவில் பாட ஒரு வாய்பு கொடுங்களேன் என்ற அன்பு கோரிக்கையும் எழுந்தது. ஆனால் அவர் பல ஹிட் பாடல்களை பாடிய பாடகர் சத்யனின் பழைய வீடியோ என்பது தற்போதுதான் பலருக்கும் தெரிய வந்துள்ளது. 

Advertisment

சத்யன் மகாலிங்கம் என்ற பெயர் கொண்ட இவர், சத்யன் எனும் பெயரில் கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ‘கலக்க போவது யாரு’ பாடல் மூலம் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பின்பு ‘சில் சில் சில் மழையே’(அறிந்தும் அறியாமலம்), ‘தோஸ்து பட தோஸ்து’(சரோஜா), ‘கனவிலே’(நேபாளி), ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’(கழுகு), ‘தீயே தீயே’(மாற்றான்), ‘குட்டி புலி’(துப்பாக்கி) உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்துள்ளார். 

இந்த நிலையில் தனது பழைய வீடியோ வைரலாவது குறித்து மனம் திறந்துள்ளார். அதே ‘ரோஜா ரோஜா’ பாடலை பாடியபடி வீடியோ வெளியிட்ட அவர், “26 வருஷத்துக்கு பிறகு இந்த பாட்டு உங்க எல்லார்கிட்டையும் வந்து சேந்திருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு நீங்க காட்டுன சப்போர்ட், லவ்... எனக்கு சொல்ல வார்த்தையே இல்ல. அதீத அன்பால நான் என்ன உங்களுக்கு கைமாறு செய்யப்போறேன்னு தெரியல. எல்லாருக்கும் மிகப் பெரிய நன்றி. இந்த பாட்டோட ஒரு நல்ல வெர்ஷனை ரீல்ஸாக ரிலீஸ் பன்றேன்” என்றார்.