singer Sangeeta passed away and two accused arrested

ஹரியானவை சேர்ந்த பிரபல பாடகி சங்கீதா தனது தாய், தந்தையுடன் டெல்லியில் வசித்து வருகிறார். இவர்பல திரைப்படங்களின் பாடல்களைபாடியுள்ளார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி புதிய பாடல் பணிக்காக வீட்டில் இருந்து சென்ற சங்கீதா இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் ஹரியானாவில் உள்ள பைனி பரன் என்ற கிராமத்தில் இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அந்த உடல் காணாமல் போன பாடகி சங்கீதா என்பது உறுதியானது. இதனையடுத்து வழக்கின் விசாரணையைதீவிரப்படுத்திய போலீசார் ஹரியானவை சேர்ந்த ரவி மற்றும் அகில் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இசை ஆல்பம் எடுப்பதாக கூறி பாடகி சங்கீதாவைவரவழைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாகபோலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisment