Singer Papon hospitalised

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் அங்கராக் மஹந்தா. இசையுலகில் பபோன் (Papon) என்ற பெயரில் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் 'காற்றில் ஏதோ புது வாசம்...' (வணக்கம் சென்னை), 'ஹலோ ஹலோ...' (வலியவன்), 'பப்லி பப்லி...' (போக்கிரி ராஜா) உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் பாடகர் பபோனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர் விபத்து குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாம் அனைவரும் இந்த சிறிய போர்களில் தனியாக போராடுகிறோம். இந்த சம்பவங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை.

Advertisment

13 வயது உள்ள எனது மகன் மருத்துவமனையில் இரவு உதவியாளராக இருப்பது இதுவே முதல் முறை. இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் இப்போது நன்றாக உடல் தேறி வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.