Advertisment

குடிபோதையில் சிறுவர்களை தாக்கிய பாடகர் மனோவின் மகன்

singer mano son beat child

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் நேற்று இரவு குடிபோதையில் சிறார்களைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்ற கிருபாகரன் என்ற சிறுவனையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் குடிபோதையில் சரமாரியாகத் தாக்கியதாக சொல்லப்படும் நிலையில் இந்த தாக்குதலால் அந்த 16வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மனோவின் மகன் குடிபோதையில் சிறுவர்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மனோ மகனின் நண்பர்களுடனும் காவல் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

Advertisment
mano singer
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe