singer liam payne passed away

உலகளவில் பிரபலமான ‘ஒன் டைரக்‌ஷன்’ இசைக் குழுவின் பாடகராக புகழ் பெற்றவர் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன். இவர் மது பழக்கம் மற்றும் போதைப் பொருள் உட்கொண்டு வருபவர். ஆனால் கடந்த ஆண்டு அதில் இருந்து வெளி வர பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இவர் அர்ஜெண்டினாவில் தங்கியுள்ளார். அப்போது நேற்று(16.10.2024) தனது ஹோட்டல் அறையின் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறை 3வது மாடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் விழுந்த சத்தத்தை கேட்டு போய் சென்று பார்த்த ஹோட்டல் ஊழியர், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை கண்டுள்ளார். மேலும் அவர் உயிரோடு இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

லியாம் பெய்னுக்கு வயது 31. இவரது மறைவு இசைத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு புகழ் பெற்ற பாடகர்கள் லியாம் பெய்ன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே லியாம் பெய்ன் மரணம் குறித்து போலீசார் தற்கொலையா அல்லது போதையில் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.