cheran

இயக்குநர் சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியானது. சினேகா, மல்லிகா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே...' என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிகேட்கக்கூடிய பாடலாக உள்ளது.

Advertisment

அப்பாடலில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட கோமகன் இசைக்குழுவினரை நடிக்கச் செய்திருந்தார் இயக்குநர் சேரன். அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த இசைக்குழுவினருக்கும் பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அப்பாடலில், நடிகை சினேகா பாடி முடித்ததும், இறுதியில் கோமகனும் சில வரிகள் பாடியிருப்பார்.

Advertisment

அதன் பிறகு, சென்னை ஐ.சி.எஃப்பில் அரசு ஊழியராக பணியாற்றிவந்த கோமகன், அவ்வப்போது கச்சேரியிலும் பாடிவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த கோமகன், பின் ஐ.சி.எஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (06.05.2021) காலமானார். கோமகனுக்கு சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.