/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1821.jpg)
பிரபல பாடகர் பம்பா பாக்யா(49) உயிரிழந்துள்ளார். இவர்ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சர்கார் படத்தில்இடம்பெற்ற 'சிம்டாங்காரன்...', எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற 'புள்ளினங்காள்...', பிகில் படத்தில் இடம்பெற்ற 'காலமே காலமே...' ஆகிய பாடல்களை பாடி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே இவர்பாடிய 'அடி எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே...' என்ற ஆல்பம் படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற 'பொன்னி நதி...' பாடலின் ஆரம்ப வரிகளைபம்பா பாக்யா பாடியிருப்பார். மேலும் இந்த படத்தில் இன்னொரு பாடலையும் பாடியுள்ளாராம். இந்தநிலையில்பாடகர் பம்பா பாக்யாஉயிரிழந்துள்ளார். இவர் இழப்பு திரையுலகினர் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)