Advertisment

'கொரோனாவால் என் மூக்கும், நாக்கும் செத்து போச்சு' - அதிர்ச்சியில் பிரபல பாடகர்! 

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 4.7 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க பாப் பாடகருமான ஆரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் கொரோனா தாக்கம் குறித்து பேசியபோது....

Advertisment

rgg

''எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தன. உடனடியாக பரிசோதனை செய்தேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக காய்ச்சல் இல்லை. சளி மட்டும் இருக்கிறது. கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. வாசனைத் திறனையும், சுவையையும் இழந்து விட்டேன். இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். அனைவரும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருங்கள்'' என கூறியுள்ளார்.

hollywood corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe