sk

தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (89) நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

Advertisment

Advertisment

தமிழகத்தில் ஜமீன் சொத்துகள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்தச் சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாகப் பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இந்த ஜமீனே புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-ஆவது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் 'சீமராஜா' படத்தில் சிங்கம்பட்டி ஜமீனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். தற்போது மறைந்த ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.